Wednesday, 28 September 2016

கொசுக்கடிக்கு நிரந்தரத் தீர்வாக ஒன்று வந்துவிட்டது.!!!!




நம் நாட்டைப் பொறுத்தவரை கொசுத் தொல்லையால் அவதிப்படாதவர்கள் குறைவு. பல்வேறு கொசுத் தடுப்பு முறைகளைப் பயன்படுத்தியும் கொசுக்களிடம் இருந்து முழுமையாகச் சுதந்திரம் பெற முடியவில்லையா? கவலைப்படாதீர்கள். கொசுக்கடிக்கு நிரந்தரத் தீர்வாக ஒன்று வந்துவிட்டது.
அது, `லேசர் சுவர்’. இந்தச் சுவர், அதிகச் செலவு வைக்காமலே பெரும் பரப்பளவை கொசுக்களின் தாக்குதலில் இருந்து தற்காக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சபோல்க்ஸ் மார்க்கா அமைப்பினர் இந்த லேசர் சுவரை உருவாக்கியிருக்கின்றனர். இது ஒருவரது வீட்டை கூடாரம் போல மூடியிருக்கும். ஒரு கொசு கூட இந்தக் கவசத்தைத் தாண்டி வீட்டுக்குள் பிரவேசிக்க முடியாது. குடும்பத்தினரின் தூக்கத்தையும் கெடுக்க முடியாது.
நாம் இதுவரை பயன்படுத்தி வரும் எல்லா தடுப்பு முறைகளையும்விட இது சிறப்பானது என்று உறுதியாகக் கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.
கொசுக்களின் உணர்வுறுப்புகளுக்கு வெளிச்சமானது தொந்தரவாக அமையும், குழப்பும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே மார்க்கா கண்டுபிடித்துவிட்டார். தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வுகளின் விளைவாக மார்க்கா தனது மனைவி சுஸா, சக ஆய்வாளர் இம்ரே பரோட்ஸுடன் இணைந்து, ஒளிச் சுவர் எனப்படும் இந்த லேசர் தடையை உருவாக்கியிருக்கிறார். கொசுக்களைப் பொறுத்தவரை இது இரும்புச் சுவர் என்கிறார்.
“நாங்கள் யதேச்சையாகத்தான் இதைக் கண்டுபிடித்தோம். நடந்தோ, பறந்தோ வரும் கொசுக்கள் இந்தச் சுவரைத் தாண்டாமல் திரும்பிச் சென்றதைக் கண்டோம்” என்று மார்க்கா கூறுகிறார்.
ரொம்பச் செலவு வைக்காமல் அதிகப் பரப்பளவை கொசுக்களிடம் இருந்து காக்கும் இந்தத் தடுப்பு முறை பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாகியிருக்கிறது. தொடர்ந்து பல கோடி ரூபாய் உதவியுடன் இதுதொடர்பான கூடுதல் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

பருத்திப்பால்

இது ஒரு இனிப்புச்சுவையான உணவு வகையாகும். தமிழ்நாட்டின் மதுரையில் சாலையோரக்கடை முதல் எல்லா இடங்களிலும் கிடைக்கும். ஜிகர்தண்டா போல பருத்திப்பாலும் மதுரையில் மிகவும் பிரசித்தம் இது பச்சரிசிமாவு, பருத்திவிதை, கருப்பட்டி, ஏலக்காய், சுக்கு, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைக்கொண்டு தயாரிக்கப்படுகிறது.சங்க இலக்கியத்திலும் பருத்திக் கொட்டையை உணவிற்காகப் பெண்கள் சேகரித்து வைத்துள்ள செய்திபதிவாகியுள்ளது. பருத்திக்கொட்டையிலிருந்து பனைவெல்லம் சேர்த்து தயாரிக்கப்படும் பருத்திப்பால் உடல் அசதிக்கு சிறந்த மருந்தாகும்.

மதுரைப்பக்கம் எப்போது போனாலும் ஒரு கப் பருத்திப்பாலாவது குடித்துவிட்டு வந்தால்தான் ஊருக்குப்போய்விட்டு வந்த திருப்தியே இருக்கும். மதுரையில் இந்த பருத்திப்பாலை ஆயாக்கள் கேன்களில் எடுத்துவந்து ‘’பர்த்தீ பால்’’ என கத்தி கத்தி வீடுவீடாக விற்பதை பார்த்திருக்கிறேன். என்னுடைய உறவினர்களின் வீடுகளுக்கு பள்ளி விடுமுறைக்காக மதுரை செல்லும்போது பருத்திப்பால் விற்கிற பாட்டி வீதிப்பக்கம் வந்தாலே கையில் தூக்குபோசியோடு ஒட்டுமொத்தமாக ஓடுவோம். இரண்டுரூவாக்கு குடுங்க.. அஞ்சுரூவாவுக்கு குடுங்கனு கையை நீட்டினால்.. தன்னுடைய கரண்டியால் தள்ளு என ஒரு அதட்டலோடு கொதிக்க கொதிக்க தூக்குபோசி நிறைய ஊற்றிவிட்டு அதில் கொஞ்சம் தேங்காய் துருவலையும் தூவிகொடுப்பாள் பாட்டி!

இந்த பருத்திப்பாலுக்கு மட்டும் ஒரு விசேஷம் உண்டு. டம்ளரில் ஊற்றிவிட்டால் சூடு குறையவே குறையாது. ஊதி ஊதி பொறுமையாகத்தான் குடித்தாக வேண்டும். சில சமயம் கொதிக்கிற பாலை அவசரப்பட்டு வாயில் ஊற்றி நாக்குவெந்துபோவதும் உண்டு!
சின்ன வயதில் இந்தப் பருத்திப்பால் குறித்த சந்தேகம் நிறையவே வரும். இதை எப்படி தயாரிக்கறாங்க.. பருத்தி என்றதுமே மனசுக்குள்ளே பஞ்சு முளைத்த செடிதான் நினைவுக்கு வரும். ஒருவேளை அந்த பஞ்சை கசக்கிப்போட்டு பால் காய்ச்சுவாங்களோ என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். ஆனால் இந்த பருத்திப்பால் பருத்தி விதைகளை கொண்டு செய்யப்படுகிறது என்பது பின்னால்தான் தெரியவந்தது.

இந்த பருத்திப்பால் செய்வது பெரிய வித்தையெல்லாம் கிடையாது. எளிமையானதுதான். பருத்தி விதைகளை வாங்கி ஓர் இரவு ஊறவைத்து அதை காலையில் எடுத்து நன்றாக அரைத்து பாலெடுத்துவிடவேண்டும். பிறகு வெல்லமோ கறுப்பட்டியோ ஏதாவது ஒன்றை காய்ச்சி பாகெடுத்து அதில் தண்ணீர் விட்டு நன்றாக கலக்கி வைத்துக்கொள்ளவேண்டும். பருத்திப்பாலை நன்கு காய்ச்சி அதனோடு இந்த பாகையும் விட்டு காய்ச்சிக்கொண்டே, அரிசி மாவு கரைசல் கொஞ்சம் சேர்த்து நன்றாக காய்ந்த பிறகு அடுப்பை விட்டு இறக்கிவிட்டு, சுக்கு ஏலக்காய் தட்டிப்போட்டு கொஞ்சம் தேங்காய்துருவலை மேலாக தூவிவிட்டால் பருத்திப்பால் ரெடி! படிக்கும்போது எளிதாக தெரிந்தாலும் ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட அளவு இருக்கிறது. அதை சரியாக செய்யவில்லையென்றால் பாயாசம் ஆகிவிடும் அல்லது களிமாதிரி இருகிவிடும்!

இந்த பருத்திவிதைக்கு நெஞ்சுசளியை போக்கும் ஆற்றல் இருக்கிறது என்று ஊரில் சொல்வதை கேட்டிருக்கிறேன். அதோடு மதுரையில் கடைகளிலும் பருத்திப்பால் விற்பதை பார்த்திருக்கிறேன்.

அண்மையில் பெசன்ட் நகர் சென்றிருந்தபோதுதான் வேளாங்கண்ணிமாதா சர்ச் அருகே அந்த கடையை பார்த்தேன். பருத்திப்பாலும் பணியாரமும் மட்டுமே விற்கிற பிரத்யேக கடை. சாதாரண கடைதான். வாசலிலேயே பெரிய பானையில் பருத்திப்பால் வைத்திருக்கிறார். விலையும் குறைவுதான் பத்துரூபாய்! உடனே ஆர்வந்தாங்காமல் ஒரு கப் வாங்கி குடித்துப்பார்த்தேன். மதுரையில் குடித்த பருத்திப்பாலுக்கும் இதற்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தாலும் இதுவும் ஓக்கே ரகம்தான். மோசமில்லை. பெசன்ட் நகர் பக்கமாக நண்பர்கள் சென்றால் அந்தக்கடைக்கு ஒரு விசிட் அடித்துவிட்டு வரலாம்!

சென்னையில் வேறு எங்கே பருத்திப்பால் கிடைக்கிறதென்று தெரியவில்லை. தெரிந்தால் நண்பர்கள் சொல்லலாம். இன்றும் நல்ல தரமான சுவையான பருத்திப் பால் வடக்கு மாசி வீதி, மேல மாசி வீதி, பழ மார்க்கெட் ஏரியாவில் கிடைக்கிறது. அதிகாலை,மாலை நேரங்களில் தள்ளுவண்டிகளில் விற்கிறார்கள். அடுத்த முறை சென்றால் சுவைக்கவும்.

பருத்திப் பால்ல B காம்ப்ளக்ஸ் சத்து இருக்குங்க. பசி உணர்வை கட்டுப்படுத்தும். நெஞ்சு சளியை குறைக்கும். அதிகமா மூட்டை தூக்கறவங்களுக்கு நெஞ்சில ஒரு வலி வரும் பாருங்க, அந்த நெஞ்சுவலியை கட்டுப்படுத்தும். 25 கிராம் பருத்தி இலையை, 100 மில்லி பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குறையும்.

செய்முறை 1:-

பருத்திக் கொட்டை - 100 கிராம்
பச்சரிசி - 3 டேபிள்ஸ்பூன்
வெல்லம் - 300 கிராம்
சுக்கு - சிறிது அளவு
தேங்காய் துருவல் - தேவையான அளவு

பருத்திக் கொட்டையை நன்கு ஊறவைத்து மிக்சியில் மீண்டும் மீண்டும் அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.
பச்சரிசியை சிறிது நேரம் ஊறவைத்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
அரைத்த பச்சரிசி மாவை பருத்தி பாலுடன் கலந்து அடுப்பில் ஏற்றி கிளறிக் கொண்டே இருக்கவும்.
பால் கலவை சிறிது கெட்டியாக பொங்கி வரும் போது வெல்லம் கலந்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
வெல்லம் முழுதும் கரைந்தவுடன் சுக்கு, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி சிறிது நேரம் கழித்து இறக்கவும்.
சூடான சுவையான பருத்திப் பால் தயார்.

Note: வெறும் வயிற்றில் பருத்திப் பால் அருந்துவது நெஞ்சுசளிக்கு நல்ல மருந்து.

செய்முறை 2:
கருபட்டியுடன் செய்வது

பருத்தி விதை - 2 கைபிடி
கருப்பட்டி - 100 கிராம்
தேங்காய் பால் - அரை மூடி
சுக்கு - அரைவிரளளவு
அரிசி மாவு - 2 ஸ்பூன்
ஏலக்காய் - 2

பருத்தி விதையை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் ஊறிய விதையை மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து பால் எடுக்க வேண்டும்.
கருப்பட்டியை தூளாக்கி ஒரு கப் தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி கொள்ளவேண்டும் .ஓரு பாத்திரத்தில் பருத்திவிதை பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும் .
ஒரு கொதி வந்த உடன் கருப்பட்டி பாலையும் தேங்காய் பாலையும் ஊற்றி காய்ச்ச வேண்டும்.
இந்த கலவை கொதிக்கும் போது அரிசி மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து அக் கலவையை கொதிக்கும் பருத்தி பாலில் சேர்த்து கரண்டியால் தொடர்ந்து இரண்டு நிமிடம் கிளறி பாத்திரத்தை இறக்கி விடவேண்டும்.
சுக்கை சிறிது வறுத்து பொடியாக்கி ,ஏலக்காயை பொடியாக்கி இறுதியில் சேர்க்க வேண்டும்.

செய்முறை 3:
சுலபமான + சிக்கனமான +ருசியான + நவீன சேமியா பருத்தி பால்

தேவையான பொருட்கள்:-

100 கிராம் - பருத்தி விதை (நயமானதாக பார்த்து வாங்கவும்)
50 கிராம் - வறுத்த சேமியா
1 / 2 மூடி - தேங்காய்
1 / 4 KG மண்டவெல்லம்
ஏலம், சுக்கு தேவைகேற்ப
உலர்திராட்சை,முந்திரி தேவைகேற்ப

செய்முறை:-

பருத்தி விதையை முதல் நாள் நன்றாக ஊற வைத்து, மறுநாள் நன்கு கழுவி விடவும். பின் பருத்தி விதையை ஆட்டி வடிகட்டி முதல் பால், இரண்டாம் பால் எடுத்து கொள்ளவும். அதில் முக்கால் லிட்டர் தண்ணீர் சேர்த்து அடுப்பை பற்ற வைத்து, ஒரு பாத்திரத்தில் இந்த பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். அதன் பின் வறுத்த சேமியாவை நன்றாக உடைத்து அதனுடன் சேர்க்கவும். இந்த கலவையை நன்கு கிளறி கொண்டே இருக்க வேண்டும். பிறகு வெள்ளத்தில் தண்ணீர் சேர்த்து நன்கு வடுகட்டி அதனையும் இந்த கலவையுடன் சேர்க்கவும். அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும்.

ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு காய்ந்ததும், அதில் உலர்திராட்சை, முந்திரி சேர்த்து லேசாக வறுத்து பின், அதனுடன் தேங்காய் சேர்த்து லேசாக வதக்கவும். இளம் பொன்னிறம் வரும் வரை வறுத்து பின் அதை பருத்தி பால் கலவையில் கொட்டி நன்கு கிளறவும். பின் ஏலம், சுக்கு தட்டி போட்டி ஒரு கொதி வரும் போது இறக்கினால் ருசியான சேமியா பருத்தி பால் தயார்.
நன்றி ஆரோக்கிய உணவுகள்

ஆற்றுநீரை எப்படி அளப்பது....


மேட்டுர் அணைக்கு 10 tmc தண்ணீர் கர்னாடக திறந்து விட்டது என்றெல்லாம் செய்திதாள்களில் படித்து இருப்பீர்கள் , அவர்கள் எப்படி 10 tmc சரியாக திறந்து விட்டார்கள் , அல்லது நாம் தான் 10 tmc சரியாக வந்ததா என்று அளந்து சரி பார்ப்பது எப்படி , ஆற்றில் வரும் தண்ணீரை எப்படி அளப்பார்கள் என்றெல்லாம் சந்தேகம் வந்து இருக்கும் உங்கள் அனைவருக்கும்.
ஆற்றில் வரும் நீரை அளப்பது எப்படி?, tmc என்றால் என்ன ?,
நீரை கன அளவுகளில் தான் சொல்வார்கள் லிட்டர் என்பதெல்லம் சிறிய அளவுக்கு அதிகம் எனில் கன அடிகளில் , நீர் வெளியேறும் வேகத்தை கியூசெக்(cusec= cubic feet per sec)), எத்தனை கன அடி நீர் ஒரு வினாடியில் வெளி ஏறுகிறது எனக்கணக்கிடுவார்கள்.tmc(thousand million qubic feet) என்றால் ஆயிரம் மில்லியன் கன அடி என்று பொருள்.ஒரு கன அடியில் 28.3 லிட்டர்இருக்கும்.
ஒரு நதி அல்லது கால்வாயில் ஓடும் நீரின் அளவை கணக்கிட சில முறைகள் உள்ளது.
சிறிய அளவில் அளப்பதற்கு நீர் கரன்ட் மீட்டர் பயண்படும் சாதாரணமாக வீட்டில் குடிநீர் இணைப்பில் இது போன்ற கருவி பொருத்தப்பட்டிருக்கும் ,
பெரிய அளவில் அளக்க ,
1)வெயர் முறை(weir method)
2)டாப்ளர் முறை பயன்படும்!
வேறு சில முறைகளும் உள்ளது, பெரிதும் பயன்படுவது இவையே!
வெயர் முறை என்பது வேறொன்றும் இல்லை, தண்ணீர் வெளியேறும் வாயிலின் கனப்பரிமானங்களை கணக்கிடுவதே.
உதாரணமாக கால்வாயின் குறுக்கே ஒரு சிறிய தடுப்பணையை கட்டி அதில் ஒரு மீட்டருக்கு ஒரு மீட்டர் அளவில் ஒரு திறப்பு மட்டும் இருக்கும் , எனவே ஒரு வினாடிய்ல் அந்த திறப்பின் மூலம் வெளியேறும் நீரின் அளவை கணக்கிட்டால் போதும் ஒரு மணி நேரத்தில் எத்தனை லிட்டர் நீர் வெளியேறியது என்பதை கணக்கிடலாம்.
கொஞ்சம் பெரிய கால்வாய்களில் இது போன்ற திறப்பை பெரிதாக வைத்து
உயரத்தை அளவிட்டு விடுவார்கள்
இத்தனை அடி உயரத்தில் நீர் போனால்
இவ்வளவு தண்ணீர் பாய்ந்துள்ளது எனக்கணக்கிடுவார்கள்.
காவிரி போன்ற பெரிய நதிகளில் இப்படி அணைக்கட்டாமல் , ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்ந்து எடுத்து அங்கே நதியின் அகலம் , ஆழம் எல்லாம் கணக்கிட்டு உயரத்தை காட்ட ஒரு பெரிய கம்பத்தில் அளவிட்டு நட்டு விடுவார்கள் எத்தனை அடி உயரம் தண்ணீர் எவ்வளவு நேரம் அக்குறிப்பிட்ட இடத்தை கடந்து சென்றது எனக்கணக்கிட்டு மொத்த நீர் பாய்ந்த அளவை கண்டுபிடிப்பார்கள்.
இதிலும் நவீன முறை டாப்ளர் ராடார் பயன்படுத்துவது.
உயரமான இடத்தில் (அ) அணைக்கட்டின் மீதே டாப்ளர் ரேடார் எனப்படும் ஒலியை அனுப்பி மீண்டும் திரும்ப வாங்கும் கருவியை பொருத்தி விடுவார்கள். இந்த ரேடார் நீரோட்டத்தின் வேகத்தை கணக்கிட மட்டுமே, மற்றபடி நதியின் அகலம் ,ஆழம் கடக்கும் வேகம் இதனை கொண்டு நீரின் கன அளவை கண்டு பிடித்துகொள்வார்கள்.
நதியின் அடிமட்டத்தில் மேடு பள்ளங்கள் இருக்கும் அதன் விளைவாக நீரின் மேற்பறப்பில் வேகம் ஒரு இடத்தில் அதிகமாகவும் ஒரு இடத்தில் குறைவாகவும் காட்டும் , இதனை ரேடாரில் பதிவு செய்வது கடினமாக இருக்கும்.
எனவே நதியின் குறுக்கே குறைந்த மட்ட அணை ஒன்றைக்கட்டுவார்கள் இது எப்படி இருக்கும் எனில் நீர் மட்டத்தில் ஒரு சுவர் போல இருக்கும் அதன் மீது நீர் வழிந்தோடும் எனவே அக்குறிப்பிட்ட இடத்தில் நீரின் மேற்பறப்பு சமமாகவும் , ஒரே வேகத்திலும் இருக்கும். எதிரொலிக்க வசதியாக நீரில் சில எதிரொலிக்கும்
பொருட்களையும் மிதக்க விட்டு அனுப்புவார்கள் , டாப்ளர் ரேடார் அனுப்பும் ஒலியை அவை கன கச்சிதமாக எதிரொலித்து அனுப்பும் எனவே துல்லியமாக நீரோட்டதின் வேகத்தை கணக்கிடலாம், அதைக்கொண்டு மொத்தமாக பாயும் நீரின் கன அளவை சொல்வார்கள்.
பிள்ளிகுண்டு என்ற இடத்தில் கர்நாடக மேட்டூர்க்கு அனுப்பும் நீரை இப்படி அளந்து அனுப்பும் , அதனை நாம் மீண்டும் மேட்டுரில் அளந்து பார்ப்போம்.இரண்டு அளவிற்கும் 20 சதவித ஏற்ற தாழ்வு(அவர்கள் 10 tmc அனுப்பினால் இங்கே 8 tmc தான் காட்டுகிறதாம்) இருப்பதாக ஒரு தனி தாவா வேறு இருக்கிறது.
உபரி தகவல் மேட்டூர் அணை(length- 1700 m, height 120 ft) என்று சொன்னாலும் அதற்கு பெயர் ஸ்டான்லி நீர் தேக்கம் ஆகும் . மொத்த கொள்ளளவு 93.4tmc.
நன்றி.சிந்திங்க

அதிசய பானம்......!!

A + B + C .... ஒரு ஆப்பிள் ஒரு பீட்ரூட் ஒரு காரட் மூன்றையும்எடுத்து நன்கு கழுவி துடைத்து தோலுடன் நறுக்கி ஜூஸ் போல அரைத்து அருந்தவும்.......!
விரும்பினால் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கலாம்......!
இந்த பானம் அருந்துவதால் பயன்கள்......!
புற்று நோய் வராமல் தடுக்க மற்றும் ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்கவல்லது இந்த ஜூஸ்.......!
ஈரல் மற்றும் சிறுநீரக சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.......!
மாரடைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் காக்கின்றது
நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது......!
உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றுகின்றது.
இரத்தத்தை சுத்தபடுதுகின்றது.
பார்வை குறைபாடுகளை நீக்குகின்றது.......!
மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு தீர்வு.......!
*உடல் இளைக்க விரும்புவோர் இதை அருந்தி வந்தால் நல்ல மாற்றம் ஏற்படும்.......!
^ கூடுமானவரை இயற்கை முறையில் விளைந்த காய்களையே பயன்படுத்துங்கள்.......!
அவ்வாறு கிடைக்காவிடில் நன்கு கழுவியபின்னரே அரைக்கவும்......!

நல்ல_நோட்டா_கள்ளநோட்டா???


இந்திய ரூபாய் நோட்டுக்கு ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு. 15–வது நூற்றாண்டில் பணப்புழக்கம் தொடங்கியபோது, வெள்ளி நாணயத்தில்தான் தொடங்கியது. 1935–ம் ஆண்டுதான் முதலில் ரிசர்வ் வங்கி இந்தியாவில் தொடங்கப்பட்டது. 1938–ம் ஆண்டு ரிசர்வ் வங்கி 6–வது ஜார்ஜ் மன்னரின் படத்தோடு முதலில் 5 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வெளியிட்டது.
தொடர்ந்து அதே ஆண்டில் 10 ரூபாய், நூறு ரூபாய், ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தன. 1940–ம் ஆண்டுதான் ஒரு ரூபாய் நோட்டு வந்தது. இப்படி தொடங்கியதுதான் ரூபாய் நோட்டுகளின் சரித்திரம். தற்போது ரிசர்வ் வங்கி 5 ரூபாய், 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய், 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகளை தயாரித்து, மக்களிடையே புழக்கத்தில் வெளியிட்டு வருகிறது. ரிசர்வ் வங்கி அச்சிட்ட 11 லட்சத்து 64 ஆயிரத்து 800 கோடி ரூபாய், 73 ஆயிரத்து 517 மில்லியன் ரூபாய் நோட்டுகளாக உலா வந்துகொண்டிருக்கிறது.
இந்த பணத்தின் மதிப்பை வைத்துத்தான் பொருளாதார மதிப்பீடுகள் கணக்கிடப்படுகின்றன. ஆனால், இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க, சில அண்டை நாட்டு சக்திகள் குறிப்பாக, பாகிஸ்தான் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து இந்தியாவுக்குள் சுற்ற வைக்கிறது. இதுபோல, நம் நாட்டுக்குள்ளும் சில தீயசக்திகள் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வினியோகத்துக்கு அனுப்புகின்றன.
இப்போதெல்லாம் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகமாக இருக்கிறது என்று மக்களிடையே ஒரு பயம் உருவாகிவிட்டது. 2013–2014–ம் ஆண்டு மட்டும் ரிசர்வ் வங்கியும் மற்றும் வணிக வங்கிகளும் 4 லட்சத்து 88 ஆயிரத்து 273 எண்ணிக்கையிலான கள்ள நோட்டுகளைக் கண்டுபிடித்துள்ளது. கடந்த ஆண்டு இதேபோல 4 லட்சத்து 98 ஆயிரத்து 252 எண்ணிக்கையில் கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மொத்த கள்ள நோட்டுகளில் 52 சதவீதம் 500 ரூபாய் நோட்டுகள்தான். 24 சதவீதம் 100 ரூபாய் நோட்டுகள். 22.5 சதவீதம் ஆயிரம் ரூபாய் நோட்டுகளாகும்.
சில ஆண்டுகளுக்கு முன்பே நாட்டில் புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளின் மதிப்பு ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலான நோட்டுகள் 2005–ம் ஆண்டுக்கு முன்பு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட தோற்றத்தைப்போல இருக்கிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2005–ம் ஆண்டுக்கு முன்பு அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 3 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயாகும். 2005–ம் ஆண்டுக்குப்பிறகு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில் பின்பக்கத்தில் கீழ் வரிசையின் மத்தியில் சிறிய அளவில் அந்த ரூபாய் நோட்டு அச்சடித்த ஆண்டு இடம்பெற்றிருக்கும். அதற்கு முன்பு அச்சிடப்பட்ட நோட்டுகளில் அப்படி ஆண்டு இடம்பெற்றிருக்காது.
கடந்த ஜனவரி மாதம் ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, ஏப்ரல் 1–ந் தேதி முதல் 2005–ம் ஆண்டுக்கு முந்தைய நோட்டுகளை அனைத்து வங்கிகளும் திரும்பப்பெற்று அதற்கு பதிலாக, புதிய ரூபாய் நோட்டுக்களை வழங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. வங்கிகள் இப்போது விநியோகம் செய்யும் ரூபாய்களிலும் இத்தகைய நோட்டுகள் இருக்கின்றன.
முதலில் வங்கிகள் இந்த நோட்டுகளை வழங்கக்கூடாது. மேலும், ஏராளமான நோட்டுகளில் இப்படி ஆண்டு மட்டும் அச்சடிக்கப்படாமல் வேறு சில வித்தியாசங்களும் இருக்கிறது. அவையெல்லாம் கள்ளநோட்டுகள் என்று தெரியாமல் இதை வாங்கிய அப்பாவிகளும், வியாபாரிகளும் என்ன செய்வது? என்று திணறுகிறார்கள். ஏராளமான கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருக்கும் நிலையில், இந்த சுமையை யார் தாங்குவது? ஒருவர் கைக்கு வந்துவிட்டாலேயே, அவரை எப்படி பொறுப்பாக்குவது?. எனவே, கள்ளநோட்டுகளை அறவே ஒழிக்க, ஒரு புதிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டு உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்.
நன்றி: தினத்தந்தி

இந்த உணவுகளில் எல்லாம் கொலஸ்ட்ரால் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

தற்போது ஏராளமான மக்கள் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் கஷ்டப்படுகின்றனர். இதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் தான் முக்கிய காரணம். ஒருவருக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்து, மேன்மேலும் கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொண்டால், அதனால் உடல் பருமன், இரத்த அழுத்த பிரச்சனை முதல் இதய நோய்கள் வரை பலவற்றை விரைவில் பெறக்கூடும்.
எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சரி, உணவுகளில் கொலஸ்ட்ராலே இல்லை என்பது தெரியாதா? அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.
ஏனெனில் இங்கு 0% கொலஸ்ட்ராலைக் கொண்ட உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை உட்கொண்டு, நன்மைப் பெறுங்கள்.
ஆம், உண்மையிலேயே உருளைக்கிழங்கில் கொலஸ்ட்ரால் சிறிதும் இல்லை. அதிலும் இதனை எண்ணெயில் பொரித்து உட்கொள்வதைத் தவிர்த்து, வேக வைத்து உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
தக்காளியில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான லைகோபைன், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். ஆகவே கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் சாலட்டுகள், சாண்விட்ச்களில் தக்காளியை சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் தினமும் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸைக் குடிக்கலாம்.
பசலைக்கீரையில் இதய ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களான பைட்டோ ஸ்டெரால்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. மேலும் இதில் கொலஸ்ட்ரால் இல்லை என்பதால், கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்களுக்கு இது ஓர் அற்புதமான உணவுப் பொருள்.
இவைகளிலும் கொலஸ்ட்ரால் இல்லை ஆனால் நார்ச்சத்து வளமான அளவில் உள்ளது. எனவே பீன்ஸ், பட்டாணி மற்றும் பருப்பு வகைகளை தவறாமல் உணவில் சேர்த்து, அதன் முழு சத்துக்களையும் பெறுங்கள்.
பலரும் வெண்ணெய் பழம் என்ற பெயரினால், இதில் கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கும் என்று தவறாக நினைக்கின்றனர். ஆனால் இப்பழத்தில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் தான் அதிகம் உள்ளது. மேலும் பல்வேறு ஆய்வுகளிலும், இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.
சோயா பீன்ஸில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது. ஆனால் இதில் கொலஸ்ட்ரால் இல்லை. மேலும் இதனை உணவில் சேர்த்தால், உடலில் புரோட்டீன் அளவு உயர்வதோடு, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு 8-10 சதவீதம் குறையும்.
ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஓர் அற்புதமான உணவுப் பொருள். ஆகவே காலையில் இதனை உணவாக உட்கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைப்பதோடு, இதய நோய் தாக்கும் அபாயத்தில் இருந்தும் குறைக்கும்.
ஆளி விதையில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும் ஆல்பா லினோலியின் அமிலம் அதிகம் உள்ளது. ஆகவே கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள், ஆளி விதையை தினமும் 1-2 டேபிள் ஸ்பூன் உட்கொள்வது உடலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும்.
பழங்களிலும் கொலஸ்ட்ரால் குறைவாகத் தான் இருக்கும். அதிலும் வாழைப்பழம், தர்பூசணி, எலுமிச்சை, நெல்லிக்காய், ஆப்பிள், பீச், ப்ளம்ஸ் போன்றவற்றை ஒருவர் தினமும் உட்கொண்டு வந்தால், உடலில் நார்ச்சத்தின் அளவு அதிகரித்து, கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.

சோப்பு யாரால் எப்போது உருவாக்கப்பட்டது ஒரு சுவாரசிய வரலாறு


மெசபடோமியப் பிரதேசத்தின் புகழ் பெற்ற பேரரசுகளில் ஒன்றான பாபிலோனிய பேரரசின் (தற்போதைய ஈராக்கின் அல்ஹில்லாஹ் மற்றும் பாபில் புரோவின்ஸ்; Al Hillah & Babil Province) கடைசி அரசரான நபோனிதஸ் (கி.மு.556 – கி.மு.539) ஆட்சிக்காலத்தில் அரண்மனையில் பணிப்பெண்களாக வேலை பார்த்து வந்த பெண்கள், எரிந்த மரங்களின் சாம்பலை பயன்படுத்தி சலவைக்கற்களின் (Marble) மீது படிந்திருந்த கறைகளை சுத்தம் செய்தனர்.
இதனை ஒரு நாள் தற்செயலாக பார்வையிட்ட நபோனிதஸ் இது குறித்து தன்னுடைய அரண்மனை ரசவாதிகளிடம் (வேதியியலாளர்கள்) விவாதம் செய்தார். இந்த நிகழ்வுதான் சோப்பு தயாரிப்பிற்கு வித்திட்டது என்று சொல்லலாம்.
இது குறித்து ஆராய்ந்த அன்றைய பாபிலோனிய வேதியியலாளர்கள், கறைகளை அகற்றி சுத்தம் செய்வதற்க்காக ஒரு பொருளை உருவாக்கிட வேண்டும் என்று ஆவல் கொண்டனர். அந்த பொருள் தண்ணீரில் கரையக் கூடியதாக இருக்க வேண்டும் அதே நேரம் இலகுவாக கரைந்துவிடாமலும் இருக்க வேண்டும், மிக முக்கியமாக அது கறைகளையும் அகற்றவேண்டும் என்பது அவர்களின் முன்னின்ற சவாலாக இருந்தது.
அதனை தொடர்ந்து, சாம்பலுடன், விலங்குகளின் கொழுப்புகளில் இருந்து பெறப்பட்ட கொழுப்பு எண்ணெய், மெழுகு, மற்றும் உப்பு இவற்றுடன் தண்ணீரையும் சேர்த்து ஒரு காரகரைசல் தயாரிக்கப்பட்டது. தயாரிக்கப்பட்ட இந்தக் காரகரைசலை(alkali) சூடுபடுத்தி கொதிக்க வைத்து வற்றச் செய்தனர்.Soap-Making
காரகரைசல் வற்றி தின்ம நிலையை அடைந்ததும் அவை சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்டது. இதுதான் மனிதன் முதலில் தயாரித்த சவர்க்காரம் (soap) ஆகும். தயாரித்த சோப்புகள் முதலில் தரையை சுத்தம் செய்யவும் பின்பு ஆடைகளை சுத்தம் செய்யவும் இறுதியாக குளிக்கவும் பயன்படுத்தினார்கள். பின்னர் இத்தொழில்நுட்பம் சில வணிகர்களின் வாயிலாக சிரியா, ரோம், எகிப்த்து மற்றும் மொரோக்கோ வரை சென்றடைந்தது.
சரி சோப்பு தயாரித்தாகிவிட்டது, இனி இந்த சோப்பிற்கு, சோப்பு என்று எப்படி பெயர் வந்ததது என்று பார்ப்போமா? Soap என்ற சொல் Sapo என்ற லத்தின் சொல்லில் இருந்து பிறந்ததாகும். கி.மு.ஏழாம் நூற்றாண்டில் ரோமாபுரி பேரரசின் தலைநகரான ரோமில் (தற்போது Rome, Italy) Sapo என்றொரு மலை இருந்ததாம். அந்த மலை எதிர்பாராத விதமாக ஒரு நாள் தீப்பற்றிகொள்ள அந்த மலையில் வசித்த விலங்குகள் உட்பட மரங்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின.
அக்காலகட்டங்களில் சோப்பு தயாரிக்க விலங்குகளின் உடலிலிருந்து எடுக்கப்படும் கொழுப்பு ஒரு முக்கிய மூலப்பொருளாக இருந்த காரணத்தினால், முற்றிலும் எரியாமல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட விலங்குகளின் உடலிலிருந்து கொழுப்பை நீக்கிய பின்பே அவற்றின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இறந்து போன அந்த விலங்குகளின் நினைவாக அந்த மலையின் பெயரை சோப்புக்கு Sapo என்று பெயரிட்டதாக சில வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கி.பி.78-ஆம் ஆண்டளவில் புகழ் பெற்று விளங்கிய ரோமானிய எழுத்தாளரான பிளினி தி எல்டர் (Pliny the Elder) ‘இயற்கையின் வரலாறு’ (Historia Naturalis) என்ற தனது நூலில் சோப்பை பற்றி குறிப்பிடுகையில் Sapo என்று குறிப்பிடுவதற்கு பதிலாக, தவறுதலாக Soap என்று குறிப்பிட்டுவிட்டார், உச்சரிப்பதற்கு sapo என்பதை விட Soap என்பது மிக எளிதாக இருந்ததால் அன்று முதல் இன்றுவரை அந்த பெயரே நிலைத்துவிட்டது.
கிட்டத்தட்ட பதிமூன்றாம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய யூனியனிலுள்ள பெரும்பாலான நாடுகள் சோப்புகளை இறக்குமதி செய்ததே தவிர தயாரிக்கும் முயற்ச்சியில் எந்த நாடுகளும் ஈடுபடவில்லை என்று தான் கூற வேண்டும், பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பாதியில் தான் ஐரோப்பிய யூனியனின் தேவைக்கென்று பிரான்ஸிலுள்ள டௌலோன் மற்றும் மார்ஸிய்லீ (Toulon, Marseille) ஆகிய நகங்களில் சோப்பு தயாரிக்கும் பணி துவங்கியது.
Homemade-Soaps-from-Melt-Pour-Soap-Bases2
பதினாறாம் நூற்றாண்டு வரை மனிதர்கள், துணிகளை துவைப்பதற்க்கும் குளிப்பதற்கும் ஒரே சோப்புகளைத்தான் பயன்படுத்தினார்கள். பிரான்ஸில் சோப்பு தயாரிக்கப்பட்ட சில காலங்களிலேயே அதாவது பதினாறாம் நூற்றாண்டில் துவக்கத்திலேயே மனிதர்கள் குளிப்பதற்க்காக தனியாக மென்மையான சோப்புகள் தயாரிக்கும் பணி துவங்கியது.
இதில் விலங்குகளின் கொழுப்புக்கு பதிலாக ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய், மற்றும் சின்னம் எண்ணெய் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. கி.பி.1788-ஆம் ஆண்டு வரை சோப்பு தயாரித்தல் என்பது ஒரு கடுமையான தொழிநுட்பமாகவும், அது ஒரு குடிசை தொழிலாகவும் தான் இருந்துவந்தது.
இந்நிலையில் 1789-ஆம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த ஆண்ட்ரூவ் பியர்ஸ் (Andrew Pears) என்பவர் முதன் முதலில் மிக எளிமையான தொழில்நுட்பத்தில் நறுமனத்துடன் கூடிய மென்சோப்புகளை தயாரிக்கும் தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டறிந்தார்.
இந்த தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி இவரது மருமகனான தாமஸ் ஜே. பார்ட் (Thomas J. Barratt) என்பவர் லண்டன் மாநகரில் உள்ள Isleworth என்ற இடத்தில் 1862-ஆம் அண்டு சோப்பு தயாரிக்கும் கம்பெனி ஒன்றை துவக்கினார். தயாரிக்கப்பட்ட சோப்பிற்க்கும் அந்த சோப்பு கம்பெனிக்கும் தனது மாமனாரின் நினைவாக பியர்ஸ் என்று பெயரிட்டார்.
இதுதான் உலகில் முதன் முதலில் வணிக நோக்கில் துவங்கப்பட்ட முதல் சோப்பு கம்பெனியாகும்.
தரமான சோப்பாக இருந்த காரணத்தினால் பியர்ஸ் சோப்பின் விலையும் சற்று அதிகமாகத்தான் இருந்தது இந்த காரணங்களால் சோப்புகளை அப்போது மேல்தட்டு மக்கள் மட்டுமே பயன்படுத்தினார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
எல்லோரும் பயன்படுத்தும் வண்ணம் தரமான சோப்புகளை குறைந்த விலையில் தயாரிக்கும் தொழில்நுட்பத்தினை வில்லியம் கோசேஸ் (William Gossage) என்பவர் கண்டறிந்து அறிமுகப்படுத்தினார். இதன்பிறகு தான் சோப்புகளை ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்க நாடுகளில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்த ஆரம்பித்தனர்.
உலகில் அனைத்தும் நாடுகளிலும் உள்ள மக்களை சோப்பு சென்றடைய காரணமாக இருந்தவர்கள் வில்லியம் லீவர் மற்றும் ஜேம்ஸ் லீவர் என்ற இரு சகோதரர்கள் என்று சொன்னால் மிகையில்லை. ஒரு பொருளை தயாரிப்பது மட்டும் முக்கியமல்ல அதனை சந்தைப்படுத்தும் வித்தை அறிந்தவனால் மட்டுமே அப்பொருளை உலககெங்கும் வாழும் அனைத்து நாட்டுமக்களிடமும் கொண்டு போய் சேர்த்திட முடியும் என்ற உண்மையை இவர்கள் தான் உலகிற்கு தெரியச்செய்தவர்கள் ஆவர்.
இவர்கள் இருவரும் இணைந்து 1886-ல் லீவர் பிரதர்ஸ் (Lever Brothers) என்ற பெயரில், பொருட்களை சந்தைப்படுத்தும் கம்பெனி ஒன்றை துவங்கினார்கள். இவர்களில் திறமையால் தான் சோப்பு உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் மிகக்குறுகிய காலத்தில் பட்டி தொட்டி எங்கும் சந்தைப்படுத்தப்பட்டது.
லீவர் பிரதர்ஸ் என்ற கம்பெனி பின்னாளில் யுனிலீவர்ஸ் (Unilever) என்று பெயர் மாற்றம் அடைந்து மிகப்பெரும் நிறுவனமாக வளர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் வாங்கும் நெய் தரமானதா? ஷாக் ரிப்போர்ட்


மணல் மணலான நெய், மணமணக்கும் நெய் என்றெல்லாம் நெய் விளம்பரங்களில் சொல்வது நமக்குத் தெரியும். ஆனால் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள மேற்கொள்ளும் ஆய்வு குறித்தும், நெய் தொடர்பாக நுகர்வோர்கள் சொன்ன கருத்துக்களையும் இங்கே பார்க்கலாம்.
ஒப்பீட்டு ஆய்வு!
ஒப்பீட்டு ஆய்வு என்பது நுகர்வோர் பயன்படுத்தும் பல பொருட்களை அரசு நிர்ணயித்துள்ள தரத்தில் உள்ளதா என சோதித்து அதில் கண்ட உண்மைகளை வெளியிடுவதாகவும். இதில் அப்பொருள் பற்றிய பயன்பாடு, தரம், பயன்படும் நாட்கள், பயன்படுத்துவதில் நுகர்வோர்க்கு ஆலோசனைகள், தயாரிப்பாளருக்கு ஆலோசனைகள் என பல வகையிலும் இந்த அறிக்கை அமைந்திருக்கும். கான்சர்ட் இந்திய நுகர்வோர் நலத்துறையின் அனுமதியுடன் இது போன்ற ஒப்பாய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாண்டு இவ்வகையில் எடுத்துக் கொண்ட உணவுப் பொருட்களில் நெய்யும் ஒன்று.
தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் தலா ஐந்து நிறுவனங்களின் நெய் மாதிரிகள் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.
ஆய்வுக்கு எடுத்துக் கொண்டநெய்யின் குணங்களூம் கீழ்க்கண்ட அளவீடுகளில் முக்கிய தன்மைகளின் அடிபடையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
1. பாக்கெட் செய்தல் மற்றும் விவரச்சீட்டிடுதல்
2. பாதுகாப்பு மற்றும் உடல் நலம்
3. தரம்
நுகர்வோர் கருத்துக்கள்!
நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டது போல, நெய் நுகர்வோர்களிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டது. நுகர்வோர் நெய் வாங்கும் போது என்ன முறைகளை கையாளுகிறார்கள், எப்படி தேர்வு செய்கிறார்கள், வாங்கிய பின் குறையிருந்தால் அவர்கள் அணுகுமுறை என்ன என்பது அறிய 32 நுகர்வோரின் கருத்துக்கள் இங்கே...
1. 41% பேர் பயன்பாட்டு நாளையும், 29% பேர் தயாரிப்பு தேதியையும் பார்த்து நெய் வாங்குகின்றனர்.
2. 74% பேர் நல்ல கம்பெனி நெய் தயாரிப்புகளையும் 24% பேர் மற்ற தயாரிப்புகளை வாங்குகின்றனர்.
3. 39% பேர் 200 கிராம் பாக்கெட் தேர்வு செய்கையில் 18% பேர் 100 கிராம் பாக்கெட் வாங்குகின்றர்கள்.
4. 84% பேர் வீட்டுத்தயாரிப்புகளை விரும்புவதில்லை ஆனாலும் 13% பேர் வீட்டுத்தயாரிப்புகள் வாங்குகின்றனர்.
5. 76% பேர் வனஸ்பதி ஒரு கலப்படப் பொருளாக நெய்யில் கலப்பது அறிந்துள்ளனர்.
6. 55% பேர் வனஸ்பதியால் ஏற்படும் உடல் பாதிப்புகளை அறிந்துள்ளனர்.
7. 52% பேர் சுத்தமான வனஸ்பதியை வெஜ்டபிள் நெய் என விற்பதை அறியாமல் உள்ளன.
8. 77% பேர் அக்மார்க் முத்திரையுள்ள நெய்யும் 3% பேர் ஐ.எஸ்.ஓ முத்திரையுள்ள நெய்யை யும் தேடி வாங்குகின்றனர்.
9. 47% பேர் நெய்யின் தரத்தை அதன் மணத்தை வைத்தும், 16% பேர் சுவையை வைத்தும் தீர்மானிக்கின்றனர்.
10.45% பேர் நெய்யில் குறையிருந்தால் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தவும், 39% பேர் கடைக்காரருக்கு தெரிவிக்கவும் அறிந்துள்ளனர்.
நுகர்வோர் கவனிக்க!
1. நாட்டில் சில பகுதிகளில் உதாரணமாக ஆந்திர மாநிலத்தில் வனஸ்பதி வெஜிடபிள் நெய் (Vegetable Ghee) என விற்கப்படுகிறது. நெய் எனபது ஒரு பால் பொருட்கள் வகையைச் சேர்ந்தது “எனவே நெய் என்னும் பெயரை தாவர வகை பொருட்களோடு இணைத்து “வெஜிடபிள் நெய்” என விற்பது ஒரு தவறான செயலாகும். நுகர்வோர் இது குறித்து விழிப்புடன் இருக்கும் நிலை உள்ளது.
2. இந்திய உணவு விடுதிகளில் நெய்யிற்கு பதிலாக வனஸ்பதி (டால்டா, வெஜிடபிள் நெய் மற்றும் ஹைடிரஜினேட்டட் வெஜிடபிள் எண்ணெய்) விலை குறைவு என்பதால் பயன்படுத்தப்படுகிறது. “வெஜிட்டபிள் நெய்” என விற்கப்படும் வனஸ்பதியில் டிரான்ஸ் கொழுப்பு என்ற பொருள் உள்ளது. இது இதய இரத்தத் குழாய்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வழி வகுக்கும். எனவே வெஜிடபிள் நெய்யை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
3. நீங்கள் இதய இரத்தக்குழாய்கள் சம்பந்தமான நோய்கள் அல்லது உடல் பருமன் இல்லாதவர் என்றால் சுத்தமான நெய்யை உட்கொள்ளலாம்.
4. ஒரு தனிமனிதன் ஒரு நாளில் பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்ட கொழுப்பின் அளவு என்பது 10 முதல் 15 கிராம் ஆகும்.
5. நீங்கள் பருமனானவர் என்றால் நெய்யை தவிர்க்கவும்.
6. நீர் மற்றும் சூரிய ஒளி இரண்டுமே நெய்யின் தன்மையை பாதிக்க கூடியவையாகும்.
பாதுகாப்பு டிப்ஸ்
1. எப்போதும் நெய்யினை நன்கு மூடி சூரிய ஒளி இல்லாத இடத்தில் வைக்கவும்.
2. நெய்யை நீங்கள் அடிக்கடி பயன்படுத்துவதாயிருந்தால் குளிர்சாதனப் பெட்டியில் வைக்காதீர்கள்
3. வெப்பமான காற்றில் திறந்தீர்கள் என்றால்,நீரானது நெய்யுடன் சேர்ந்து கெட்டுவிட வாய்ப்புள்ளது.
4. நெய் சுத்தமான கண்டெயினரில் காற்று புகாதபடி அடைத்து வைத்தால் 2 முதல் 3 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
5. திறக்காமல் நெய் கண்டெயினரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தால் 1 வருடம் வரை கெடாமல் இருக்கும்.
6. நல்ல முறையில் தயாரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட நெய் பல மாதங்கள் அறை வெப்ப நிலையில் கெடாமல் இருக்கும்.
7. நீண்ட நாள் பயன்பாட்டிற்கு நெய்யினை ஒளியே புகாத, கண்டெயினரில் காற்று புகாதபடி இறுக்கமாக மூடி இருட்டான பகுதியில் பாதுகாத்து வைக்கப்பட வேண்டும்.
8. நல்ல நெய் என்பது ஈரப்பதம் நீக்கப்பட்டும், பால் திடப்பொருட்கள் 2500 F உஷ்ண நிலையில் எரிக்கப்பட்டும், பின்னர் அந்த திடப்பொருட்கள் அகற்றப்பட்டும் தயாரிக்கப்படுவதாகும்.
9. எனவே ஒரு நல்ல நெய் என்பது பால்திடப் பொருள் மற்றும் ஈரப்பதம் இல்லாத ஒரு வெண்ணெயின் கொழுப்பாகும்.

உலக அதிசய கலங்கரை விளக்கம்

உலகின் முதல் கலங்கரை விளக்கம் எது தெரியுமா? பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான அலெக்ஸாண்ட்ரியாவின் கலங்கரை விளக்கம்தான். ஃபரோஸ் தீவில் (Pharos Island) அமைந்திருந்தது இந்தக் கலங்கரை விளக்கம். கி.மு. 290ல் கட்ட ஆரம்பிக்கப் பட்ட இதை முழுமையாகக் கட்டி முடிக்க 20 வருடங்கள் ஆனது. இது கட்டி முடிக்கப்பட்டபோது, எகிப்தின் கிரேட் பிரமிடுக்கு அடுத்து உல கின் உயரமான கட்டிடமாக விளங்கியது. பல பூகம்பங்களை எதிர்கொண்டு இறுதி யில் அழிந்து போன இந்தக் கலங்கரை விளக்கத்தின் மிச்ச சொச்சங்களை பிரெஞ்சு புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.இந்தக் கலங்கரை விளக்கம், எகிப்திலுள்ள அலெக்ஸாண்ட்ரியா நகரின் துறைமுகத்திற்கு வரும் வணிகக் கப்பல்களுக்கு வழிகாட்டுவதற்காக அமைக்கப்பட்டது.

Monday, 26 September 2016

கையேந்தி நிற்பது தமிழகம் மட்டுமே:

 
ஆந்திராவுக்கு கிருஷ்ணா; கேரளாவுக்கு முல்லைப் பெரியாறு; கர்நாடகாவுக்கு காவிரி
சமீபத்தில் ஓசைப்படாமல் ஒரு செய்தி வந்தது; கிருஷ்ணா - கோதாவரி இணைப்பு பற்றிய செய்தி தான் அது; உண்மையில் ஏதோ நதிகள் இணைப்பு என்று தான் தோன்றும். ஆனால், கடலில் கலக்கும் கோதாவரியின் நீரை திருப்பி, கிருஷ்ணாவில் கலக்க வைத்து 17 லட்சம் ஹெக்டேர் விவசாயத்துக்கு வழி வகுத்த மெகா திட்டம் இது. முதல்வர் சந்திரபாபுவின் கனவு திட்டம் இது. அதுவும், அவர் வெறும் 5 மாதங்களில் சாதித்தார். ஆம், ஐந்தே மாதங்களில் நிறைவேற்றி காட்டினார்; இது நிஜம்; நம்புங்கள். இன்னொரு பக்கம் கர்நாடகா; மைசூர் பட்டிணம், மதராஸ் பட்டிணம் என்று இருந்தபோது இருந்த விவசாய நில பரப்பை விட, பின்னாளில் காவிரி நதி வழியாக அவர்கள் போட்ட திட்டங்களால் விவசாய சாகுபடி நில பரபரப்பு கடந்தாண்டு வரை பல மடங்கு அதிகரித்து இப்போது அதன் மொத்த விவசாய பரப்பு 60 லட்சம் ஹெக்டேர். ஆனால், தமிழகத்தில் அதே காலகட்டத்தில் விவசாய நிலங்கள் படிப்படியாக சுருங்கி இப்போது 33 லட்சம் ஏக்கராக உள்ளது என்பது பரிதாபமான விஷயம் தானே. கேரளாவை பொறுத்தவரை கேட்கவே வேண்டாம்; ஆறுகள் சங்கமம் அது. இருந்தாலும் முல்லைப்பெரியாறு ஒன்றே போதும்.
தமிழக காய்கறிகள் கூட வேண்டாம் என்ற அளவுக்கு அவர்கள் விவசாயத்தில் தன்னிறைவு அடைய தயாராகி மும்முரமாக முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், தமிழகத்தில்...? எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்றால், கர்நாடகா காவிரியில் விடும் தண்ணீரை கூட கடைமடை பகுதி வரை டெல்டாவில் போய்ச்சேர முடியாத அளவுக்கு பல கால்வாய்கள் தூர்வாறாமல், அதற்காக விவசாயிகள் போராடும் நிலையில் தான் உள்ளது. நீர் நிலைகளை மேம்படுத்த 5,763 ஏரிகளை தூர்வாரும் திட்டத்துக்கு மத்திய அரசு 5 ஆயிரம் கோடி வரையில் நிதி உதவி செய்ய முன்வந்தது. ஆனால், திட்ட அறிக்கையை உரிய காலத்தில் தயாரித்து தாக்கல் செய்யாததால் நிதி உதவி கிடையாது என்று மத்திய அரசு கைவிரித்துவிட்டது. (தமிழக அரசின் செயல்படாத நிலைக்கு சமீபத்திய பலன் இது.) கால்வாய்களை காணோம்; ஏரிகளை காணோம்; குளங்களை தூர்த்து விட்டார்கள் ரியல் எஸ்டேட் ஆதிக்கத்தினர். சட்டவிரோதமாக மண் அள்ளுவது, அதனால் ஆறுகள் தூர்ந்து போவது, ஆக்ரமிப்புகள்...எல்லாம் சர்வ சகஜமாக நடக்கிறது. கேட்பதற்கு ஆளில்ைல; தடுப்பதற்கு அதிகாரிகள் இல்லை. குட்டக்குட்ட குனிந்து தற்கொலை செய்யும் அளவுக்கு போவது விவசாயிகள் என்பதே அவர்கள் கதி என்றாகி விட்டது.
கர்நாடகா செய்வதென்ன?
இந்தியாவில் பெரிய நிலபரப்பு கொண்ட மாநிலங்களில் பட்டியலில் கர்நாடகம் 8வது இடத்தில் உள்ளது. மாநிலத்தின் மொத்த பரப்பளவு 1,90,498 சதுர கி.மீ. கொண்டுள்ளது. இதில் 1,40,598 சதுர கி.மீ. நீர்பாசன பகுதியாக உள்ளது. அதில் 1,07 லட்சம் சதுர கி.மீட்டரில் முடிந்த வரை பாசன வசதி செய்யப்படுகிறது. இதை 1,70 லட்சம் சதுர கி.மீட்டருக்கு அதிகரிக்க மாநிலத்தில் கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தி பல்வேறு நீர்பாசன திட்டங்கள் செயல்படுத்த அரசு முடிவு செய்தது. கடந்த 2010 முதல் 2020ம் ஆண்டு முடிய 10 ஆண்டுகள் நீர்பாசன மேம்பாட்டு ஆண்டாக அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மாநிலத்தில் மொத்தம் 2,011 நீர்பாசன திட்டங்கள் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
கேரளாவின் அக்கறை
கேரளாவில் மொத்தம் 44 ஆறுகள் ஓடுகின்றன. இவற்றில் பெரியாறு, பாரதப்புழா, பம்பை, சாலக்குடி மற்றும் நெய்யாறு உட்பட 41 ஆறுகள் மேற்கு நோக்கியும், கபினி, பவானி மற்றும் பாம்பாறு ஆகிய ஆறுகள் கிழக்கு நோக்கியும் ஓடுகின்றன. கேரளாவில் ஆண்டுக்கு சராசரியாக 3,055 மி.மீ. அளவுக்கு மழை பெய்கிறது. தமிழ்நாட்டை விட இது 3 மடங்கு அதிகம். தற்போது கேரளாவில் மொத்த விவசாய உற்பத்தியில் நெல் உற்பத்தி, தேங்காய் மற்றும் ரப்பருக்கு அடுத்தபடியாக 3வது இடத்தில் தான் உள்ளது. கடந்த சில வருடங்களாக விவசாயத்தில் தன்னிறைவு பெற கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கோவை உட்பட பல தமிழக மாவட்டங்களில் இருந்து பெற்று வந்த காய்கறிகளை கூட வேண்டாம் என்று சொல்லி, அதில் ரசாயன உரம் கலந்திருப்பதாக காரணம் கூறி குறைத்து வருகிறது. காரணம், தன்னிறைவில் கவனம் செலுத்த துவங்கி விட்டது; ஆனால், தமிழகமோ, விவசாயிகள் நண்பன் என்று கூறும் அரசோ கலங்கியதா? இல்லை.
ஆந்திராவில் மெகா சாதனை
ஆந்திராவில் கிருஷ்ணா - கோதாவரி நதிகள் இணைப்பு திட்டத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அந்த மாநில அரசு உறுதிப்படுத்தியுள்ளது சமீபத்திய வரலாற்று நிகழ்வு. மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகே உற்பத்தியாகி ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களை வளம் கொழிக்கச் செய்யும் கோதாவரி நதி சுமார் 1,465 கி.மீ. தூரம் ஓடி வங்கக் கடலில் கலக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 3,000 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது.
கிருஷ்ணா நதியும் மகாராஷ்டிராவில் உற்பத்தியாகி கர்நாடகா, தெலங்கானா ஆந்திரா வழியாக வங்கக் கடலில் கலக்கிறது. ஆந்திராவில் கிருஷ்ணா டெல்டா பகுதி விவசாயத்தை மேம்படுத்தவும், வறட்சியை போக்கவும் கோதாவரி - கிருஷ்ணா நதி இணைப்பு திட்டம் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது ைகயில் எடுக்கப்பட்டு திட்டப்பணிகள் தொடர்ந்து நடந்து இப்போது அது நனவாகி உள்ளது. இதன் பலன்; ராயலசீமா, கிருஷ்ணா டெல்டா பகுதியில் 17 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பயனடையும். இரு நதிகளை இணைப்பது தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு முன்னோடியாகவும் முதலாகவும் அமைந்துள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடுவால் தீட்டப்பட்டு 1,300 கோடி ஒதுக்கப்பட்டு 5 மாதங்கள் 16 நாட்களில் இதன் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
தேயும் தமிழகம்
தமிழகத்தில் வேளாண் வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்கள் செயல்படுத்துவதாக அறிவிப்பு வருகிறது; ஆனால் ஏட்டளவில் தான் உள்ளதே தவிர, செயல்பூர்வமாக எங்கும் காணமுடியவில்லை என்பதும் விவசாயிகளின் வேதனை குரல். இதனால், வேறு வழியில்லாமல், பெரும்பாலான உணவு பொருட்களுக்கு நாம் அண்டை மாநிலங்களை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு 60 லட்சம் ஹெக்டேருக்கு மேல் இருந்த விவசாய நிலப்பரப்பு தற்போது 47 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. நாட்டின் மொத்த நீராதரத்தில் 3 சதவீதம் மட்டுமே தமிழகத்தில் உள்ளது. ஆனால், மொத்த பாசன பரப்பு 33.11 லட்சம் ஹெக்டேராக உள்ளது. நெற்களஞ்சியமான திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் காவிரியில் தண்ணீர் கிடைத்தால் மட்டுமே விவசாயம் சாத்தியம். மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்கள் கேரளாவின் முல்லை பெரியாறு அணையையும், கோவை, திருப்பூர் மாவட்டங்கள் பரம்பிக்குளம் - ஆழியாறு அணைகளையும், ஈரோடு, கரூர் மாவட்டங்கள் பவானி ஆற்று பாசனத்தையும் நம்பியிருக்க வேண்டியுள்ளது.
இது தான் தமிழகத்தின் இன்றைய நிலை; இதை மாற்ற முடியுமா? ஏன் முடியாது; பக்கத்து மாநிலங்களில் செய்வதை காப்பி அடித்தால் கூட நம்மால் சாதிக்க முடியும். விவசாயத்தை காப்பாற்ற முடியும். ஆனால், காஸ் பைப் பதிக்க நிலம் வேண்டுமா...விவசாயிகள் தலையில் கை வை...ரசாயன ஆலைகள் துவங்க வேண்டுமா? விவசாயிகள் நிலத்தை எடு; இப்படி எதற்கு எடுத்தாலும் விவசாயிகள் தான் குறிவைக்கப்படுகின்றனர்; அரசும் விவசாயிகளின் மூச்சை நிறுத்துவதிலேயே குறியாக இருக்கிறது என்பதை விவசாயிகளின் போராட்டங்கள், வேதனை முனங்கல்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம். அறிவிப்பு மேல் அறிவிப்பு வந்தாலும், அவை செயல்படுகிறதா என்கிற போது வெறும் பூஜ்யம் தான் என்று கடைசியில் அம்பலம் ஆகிறது. தமிழகம் விவசாயத்தில் செழித்த காலம் போய், பாசனத்துக்கு தண்ணீரை சேமித்த காலம் போய், கழுதை தேய்ந்து கட்டெரும்பாகி விட்ட நிலையில் தான் விவசாயமும் , விவசாயிகள் நிலையும் உள்ளது என்றால் மிகையல்ல. மொத்தத்தில் தமிழகத்தில் விவசாயிகளின் எதிர்காலம் பெரிய கேள்விக் குறியாக (?) உள்ளது.
எஞ்சியதை காப்பாற்றுமா அரசு?
தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் நல்லசாமி: தமிழகத்தில் வேளாண் தொழில் படிப்படியாக அழிந்து வருகிறது. மிக முக்கிய பிரச்னை தண்ணீர் பற்றாக்குறைதான். கங்கை - காவிரி இணைப்பு சாத்தியமில்லை என்ற போதிலும் குறைந்தபட்சம் தமிழக நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரியில் உபரி நீர் கிடைக்கும் காலத்தில் அதை தேக்கி வைக்க திட்டங்கள் அவசியம். நீர் நிலைகளில் மணல் சுரண்டலை தடுக்க வேண்டும். இதனால், எஞ்சியுள்ள விவசாய நிலங்களை முழுமையாகப் பாதுகாக்க முடியும். அதையாவது அரசு செய்ய வேண்டும்.
தமிழக விவசாயம்- ஒரு பார்வை
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் தமிழகம் 7 வது இடத்தில் உள்ளது.
* தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பு - 130.33 லட்சம் ஹெக்டேர்
* நாட்டின் மொத்த பரப்பில் 4 சதவீதம்
* நிகர சாகுபடி பரப்பு 47.14 லட்சம் ஹெக்டேர் (36 சதவீதம்)
* தேசிய அளவில் தமிழகத்தின் நீர் ஆதாரம் 3 சதவீதம்
* பாசன பரப்பளவு: 33.11 லட்சம் ஹெக்டேர்
* நில உரிமையாளர்களின் மொத்த எண்ணிக்கை: 81.18 லட்சம் பேர். அவர்களது கைவசமுள்ள நிலப்பரப்பு 64.88 லட்சம் ஹெக்டேர்
* சிறு மற்றும் குறு விவசாயிகள் 92 சதவீதம். இவர்களிடம் உள்ள நிலப்பரப்பு 61 சதவீதம்.
முயற்சித்தால் ஒரு முதல்வரால் முடியாதா?
தேசிய நதிகள் இணைப்பு திட்டம் என்பது ஒவ்வொரு இந்தியரின், விவசாயிகளின் கனவு. பல ஆண்டாக இதுபற்றி பேசினாலும் ஒரு தீர்வும் வரவில்லை. ஆனால், சந்திரபாபு நாயுடு, ஐந்தே மாதத்தில் முழுமூச்சாக அதே சிந்தனையாக இருந்து கோதாவரி - கிருஷ்ணா நதிகள் இணைப்பை நிறைவேற்றி சாதித்து காட்டியுள்ளார்; இதை நாடு முழுவதும் பாராட்டி உள்ளனர். ஒரு முதல்வர் முயற்சி செய்தால் இப்படி மாநில நதிகள் இணைப்பை கூட செய்ய முடியாதா என்ன? என்று விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர்....

மீன்எண்ணெய் சாப்பிட்டால் மூளை இளமையாக இருக்கும்...

தொடர்ந்து மீன் எண்ணெய் சாப்பிட்டு வந்தால் மனிதனிள் மூளை மிகவும் இளமையாக இயங்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மீன் எண்ணெயில், ஒமேகா-3 கொழுப்பு அமிலம் என்ற ஊட்டச்த்து அதிக அளவில் உள்ளது.

அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஒமேகா-3, மூளையை இளமையாக வைத்திருக்க உதவுவதாக கண்டறிந்துள்ளனர்.

67 வயதுள்ள சுமார் 1,500 பேரிடம் ஆய்வு நடத்தி, அவர்கள் இதை கண்டுபிடித்துள்ளனர். ஒமேகா அமிலத்தை குறைவாக சாப்பிட்டவர்களின் மூளை சுருங்கியும், ஞாபக மறதி, மனநிலை பிறழ்வு போன்ற பாதிப்புக்கும் ஆளாகி இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

எனவே, ஒமேகா அமிலம் நிறைந்த மீன்களையும், மீன் எண்ணெயையும் சாப்பிட்டால் மூளை இளகையாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

எல்லோரும் பாவிக்கும் வாசனை திரவியம்

எல்லோரும் வாசனை திரவியமான சென்ட் பாவிப்பது வழமை . வியர்வை நாற்றம் தெரியாமல் , மணக்காமல் நல்ல வாசனை வீசுவதற்காக நாம் எல்லோரும் சென்ட் பாவிக்கின்றோம் . என்னதான் வித்தியாசமான உடையுடன், விதவிதமான அணிகலன்களை அணிந்து வலம் வந்தாலும், ஒருவர் உடம்பிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் அவரைச்சுற்றி இருப்பவர்களை முகம் சுளிக்க வைத்துவிடும். வெயில் காலத்தில் இதனுடைய பயன்பாடு இன்னும் அதிகரிக்கும். சிலரிடம் துர்நாற்றம் இல்லையென்றாலும், தன்னைச் சுற்றி உள்ளவர்களை வாசனையால் கவருவதற்காக வாசனைத் திரவியங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
சில வாசனை திரவியங்கள் அதிக வாசனை கொண்டவையாக உள்ளன . ஏனையவர்களுக்கு அந்த வாசனை பிடிக்காமல் தலை சுற்றல் , தலை இடி போன்றவை இருக்கும் . அப்படியான வாசனை திரவியங்களை தவிர்த்து எல்லோருக்கும் பிடிக்கும் , எல்லோரும் விரும்பத்தக்கிய வாசனை திரவியங்களை உபயோகித்தல் நல்லது .
பழங் காலத்தில் இருந்தே உலகமெங்கிலும் வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தபட்ட தாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், முதன்முதலில் வாசனைத் திரவியங் களை பயன்படுத்திய பெருமை எகிப்தையே சேரும். ஒரு காலத்தில் அரசர்கள் , பெரும் மதிப்புக்கு உரியவர்கள் மட்டுமே வாசனை திரவியங்களை உபயோகித்து வந்தனர் . இப்போது எல்லோரும் பயன்படுத்தும் வண்ணம் வாசனை திரவியங்கள் வந்து விட்டன .
பொது வைபவங்கள் , விழாக்கள் செல்லும்போது மட்டும்தான் வாசனைத் திரவியங்களை பயன்படுத்த வேண்டும் என்ற வரைமுறை எதுவும் கிடையாது. அதேபோல் இன்னார்தான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுபாடும் கிடையாது. அலர்ஜியை ஏற்படுத்தாத வாசனைத் திரவியங்களை யார், எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
சிலர் எளிதில் தூங்குவதற்காக இரவில் தூங்க முன்னர் மென்மையான வாசனை வீசும் திரவியங்களை பூசிக் கொள்வர். பொதுவாக வாசனைத் திரவியங்கள் ஒருவித வசீகரமான சூழ்நிலையை ஏற்படுத்துகின்றன. இதனால் தாழ்வு மனபான்மை இல்லாமல் சந்தோஷமாக வெளியில் சுற்ற முடிகிறது. பலர் இருக்கக்கூடிய இடத்தில் உங்களை தனித்தன்மை வாய்ந்தவராகக் காட்டுகிறது. தன்னம்பிக்கைடன் செயல்பட முடிகிறது.
வெயில் காலங்களில் லேசான வாசனைத் திரவியங்களைம், குளிர்காலங்களில் `ஹெவி’யான வாசனைத் திரவியங்களையும் பயன்படுத்த வேண்டும். இயற்கையான நறுமண பொருட்களில் மட்டுமின்றி, கெமிக்கல்ஸ், ஆயில், ஆல்கஹால் போன்றவற்றில் இருந்தும் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கபடுகின்றன.
உடலில் பூசிக்கொள்பவை, உடையில் பூசிக்கொள்பவை என இரண்டுவிதமான வாசனைத் திரவியங்கள் உள்ளன. அதில் உங்களுக்கு எது உகந்ததோ அதைத் தேர்ந்தெடுப்பது நல்லது. உடலில் பூசும் வகையிலான வாசனைத் திரவியங்களை பயன்படுத்தும்போது அலர்ஜியை ஏற்படுத்தாத வாசனைத் திரவியங்களாக பார்த்து பயன்படுத்த வேண்டும்.
வாசனைத் திரவியங்களை பொறுத்த வரையில் பாட்டிலில் இருக்கும்போது ஒருவிதமான வாசனையும், உடலில் பூசிக்கொண்டபின் வேறுவிதமான வாசனையும் உண்டாகும். எனவே, வாங்கும்போதே உடைகளில் சிறிது தெளித்து முகர்ந்து பார்த்து வாங்க வேண்டும். சிலவற்றில் பூசிக்கொண்டதும் வாசனை தோன்றாமல், சிறிது நேரம் கழித்தே தோன்றும். இதுபோன்ற வாசனைத் திரவியங்களைத் தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.
மல்லிகையில் இருந்து தயாரிக்கும் வாசனை திரவியம் மல்லிகையின் மணம் கொண்டதாக அமையும் .விதவிதமான வாசனைகளில், கலர்களில் வாசனைத் திரவியங்கள் கிடைக்கின்றன. ஆண்கள், பெண்கள் இருவருக்கும் தனித்தனி வாசனைத் திரவியங்கள் உள்ளன. அதேபோல் பாரம்பரிய முறை, நவீன முறை என இரண்டு விதமான முறைகளில் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கபடுகின்றன. கூடுதலாக இளவயது ஆண், பெண் இருவருமே தங்களது எதிர்பாலினர்களைக் கவருவதற்காக வாசனைத் திரவியங்களை பயன்படுத்துகின்றனர்.
நறுமணம் தரக்கூடிய பூக்களில் தயாரிக்கபடுபவை, பழங்களின் சாற்றில் இருந்து தயாரிக்கபடுபவை, கடலில் உள்ள பொருட்களால் தயாரிக்கப்படுபவை, மரங்களின் வேர்கள், இலைகள், விதைகள் ஆகியவற்றில் தயாரிக்கபடுபவை, . ரோஜா இதழ்களை கொண்டு நறு மணத்துடன் தயாரிக்கப்பட்டவை என பல வகைகளில் இந்த வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன .
வாசனைத் திரவியங்களை வாங்கும் முன், மணிக்கட்டின் மீது சிறிதளவு தெளித்து பாருங்கள். சிறிது நேரம் கழித்து அலர்ஜி எதுவும் ஏற்படவில்லையென்றால், அதை வாங்கலாம். அலர்ஜி ஏற்படும் பட்சத்தில் வேறொன்றை பரிசோதிபது நல்லது.
வாசனை திரவியங்களை பயன்படுத்தும் போது தலை முடிகளில் படாதவாறு பயன்படுத்த வேண்டும் . சிறிதளவே தெளிக்க வேண்டுமே தவிர வாசனை திரவியங்களை அதிகம் தெளிக்க கூடாது . எல்லோரும் வியர்வை நாற்றத்தில் இருந்து விடுபட வாசனை திரவியங்களை பயன்படுத்துங்கள் . வாசனை திரவியங்கள் தயாரிக்கும் நாடுகளில் பிரபல்யம் பெற்றது பிரான்ஸ் நாடுதான் .

அதிர்ச்சியளிக்கும் உண்மை..!! படித்து பிறருக்கும் பகிருங்கள்.

அரசின் உதவியோடு, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உங்கள் பணத்தை கொள்ளையடிக்க முடியுமா..? முடியும்..!!
20 ஆண்டுகளுக்கு முன் சுமார் 80 கோடி செலவில் அமைக்க பட்ட 90கிமீ சாலைக்கு சுங்கவரியாக கடந்த10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2,268 கோடிகள் தனியாரால் வசூலிக்கப்பட்டுள்ளது. இது ஒரு தோராய கணக்கு மட்டுமே, உண்மையில் இதைவிட மூன்று மடங்கு வசூல் நடந்திருக்க வாய்ப்புண்டு..
சென்னை - திருச்சி, சாலையில் செங்கல்பட்டு அருகே பரனுரில் உள்ள தனியாருக்கு சொந்தமான சாலை சுங்கவரி சாவடியை கடந்து செல்லாதவர்களே தமிழகத்தில் இருக்க முடியாது. அப்படி கடந்து சென்றவர்கள் சொந்த வாகனம் அல்லது பேருந்தில் என எப்படி சென்றிருந்தாலும் வரி செலுத்தியுள்ளோம். காரணம் பேருந்து கட்டணம் சாலைவரி சேர்த்தே கணக்கிட படுகிறது. ஒருஅரசு பேருந்து சென்னையில் இருந்து திருச்சி சென்று திரும்பி வர, சுமார் 3000 ரூபாய் தனியாருக்கு சுங்கவரி செலுத்த வேண்டும். ஆக அந்த பணமும் பயண கட்டணத்தோடு சேர்க்கப்படுகிறது.
ஒரு நாளைக்கு சுமார் 90 ஆயிரம் வாகனங்கள் இந்த சாவடியை கடக்கிறது, சிறிய வாகனத்திற்கு ரூ.35ம், நடுத்தர சரக்கு வாகனத்திற்க்கு ரூ.70ம், பேருந்து, லாரி போன்றவற்றிர்கு ரூ110ம், கண்டெய்னர் போன்ற பெரிய சரக்கு வாகனத்திற்க்கு ரூ.210ம் வசூலிக்க படுகிறது. நாம் தோராமாக ஒரு வாகனத்திற்கு ரூ70 என கணக்கிட்டால்.
90,000×70= 63,00,000 ஒரு நாள் வசூல்.
63,00,000×30= 18,90,00,000 ஒரு மாத வசூல்.
18,90,00,000×12= 226, 80,00,000 ஒரு வருட வசூல் 226 கோடி 80லட்சம்.
226,80,00,000×10 = 2,268,00,00,000.
வெறும் 80 கோடியை முதலீடு செய்து விட்டு தனியார் நிறுவனம் கடந்த 10 வருடத்தில் வசூல் செய்த பணத்தை கணக்கிட்டாலே 2,268 கோடிகள்.
ஒரு சாலையில் இவ்வளவு என்றால் இந்தியா முழுவதும் எத்தனை லட்சம் கோடிகள் கொள்ளை நடக்கிறது..?
இப்போது சொல்லுங்கள் இது சுங்க வரியா..? பகல் கொள்ளையா..?
இதை நாம் எதிர்க முடியாது காரணம் தனியார் முதலீட்டை வரவேற்க்கும் அரசு செய்துள்ள ஒப்பந்தம் அப்படி, இந்தியாவில் தனியார் மற்றும், வெளிநாட்டு நிறுவனங்களை அரசு வரவேற்க்க காரணம் புரிகிறதா..? அணைத்திலும் பங்கு, இதில் மன்மோகனுக்கும், மோடிக்கும் எந்த வேறுபாடும் இல்லை..!!

தங்கம் பற்றி உங்களுக்கு முழுமையாக தெரியுமா??

பொதுவாகத் தங்கம் என்றாலே அணிகலன், சேமிப்பு என்ற வகையில் மட்டுமே அதன் பயன்பாடு தெரியும். ஆனால் அதையும் தாண்டி தங்கத்தினால் பல நன்மைகளும் தீமைகளும் உள்ளன. 

தங்கம் சாப்பிடுவது நல்லதா? 

தங்கம் அணிவதால் உடலுக்கு எவ்வித நன்மையையும் அளிப்பதில்லை. மாறாக செரிமான சக்தியைக் குறைக்கின்றது. ஒருசிலர் தங்கத்தை உணவாக உட்கொண்டால் நல்லது என்று கூறுவார்கள் ஆனால் அதில் சிறிதும் உண்மையில்லை.

ஆரோஃபோபியா: 

ஒரு சிலருக்கு தங்கம் என்றாலே அலர்ஜியாக இருக்கும். தங்க நகைகளை அணிய ஒரு இனம் புரியாத பயம் வரும். இவ்வகையான நோய்க்கு ஆரோஃபோபியா என்று பெயர். மேலும் இதனால் குமட்டல், தலைச்சுற்றல், பயம் குறித்த நோய்கள் ஆகியவை தாக்கும் அபாயங்களும் உண்டு.

தங்க ஏ.டி.எம்:

துபாயில் ஏ.டி.எம் மிஷினில் இருந்து 10 கிராம் தங்கக்கட்டி வரும். தங்கக் கட்டிகளை அந்நாட்டு மக்கள் ஏ.டி.எம் மிஷினில் இருந்தே பெற்றுக் கொள்கின்றனர்.
தங்கத் தோடும் மாலுமிகளும்:

ஒலிம்பிக் மெடலில் இருப்பது தங்கமா? 

ஒலிம்பிக்கில் கொடுக்கும் தங்க மெடலில் உண்மையில் தங்கம் 1% தான் உள்ளது. மீதியுள்ள 99% சில்வர் மற்றும் காப்பார்தான் உள்ளது. கடைசியாக முழுவதும் தங்கத்தினால் கோல்ட் மெடல் கொடுத்தது 1912ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டியில்தான்.

கைப்பேசியில் தங்கம்: 

செல்போனில் ஒரு குறிப்பிட்ட அளவு தங்கம் இருக்கின்றது. செல்போனினால் உலகில் உள்ள அனைவருக்கும் நான்கு கிலோ தங்கம் கிடைக்கும்.

வாகன விபத்துக்கான காரணம் என்ன?

1. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
2 .அதிவேகம்
3. வாகனங்கள் ஓட்ட தெரியாதவர்களுக்கு உரிமம் அளிப்பதால்
4. போதிய. தூக்கம் ஓய்வின்றி ஓட்டுனர்கள் வாகனம் ஓட்டுவதுதான்
5. குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால்
6 . தரமற்ற வாகனங்கள் ஓட்டுவதால்
7. குண்டும் குழியுமான சாலைகளும் பல விபத்துக்கு காரணமாகின்றன
8. சாலை விதிகளை பொதுமக்கள் மீறுவது - அலட்சியம்
9.பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இல்லாதது / சாலைகளின் வடிவமைப்பு குறை பாடுகளாலும்
10. சாலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கடைகள் கட்டுவதால் வாகன நெரிசல் அதிகமாகி விபத்துக்கள் நேரிடுகின்றன.
உங்கள் உயிர் மட்டுமல்ல, அடுத்தவர்கள் உயிரும் விலைமதிக்க முடியாததுதான்..
விபத்துக்களை தவிர்க்க சில வழிகள்:
1. வாகனங்களை சாலைவிதிகளின் படி ஓட்டுவது.
2. நிர்ணயிக்கப்பட்ட வேகத்திற்குமேல் வாகனத்தை ஓட்டாமல் இருப்பது
3. முறையான சைகைகள் இல்லாமல் வாகனங்களைத் திருப்புவது மற்றும் முந்திச் செல்வதை தவிர்ப்பது
4. கண்கூசும் விளக்குகளை ஒளிரச் செய்வதை தவிர்ப்பது
5. தூக்கக் கலக்கத்தில், மது போதையில் வண்டி ஓட்டாமல் இருப்பது
6. பேசிக் கொண்டே வண்டி ஓட்டாமல் இருப்பது
7. செல்போனில் பேசிக் கொண்டே வண்டி ஓட்டுவதை முற்றிலும் தவிர்ப்பது
8. அளவுக்கு அதிகமானவர்களை ஏற்றிச் செல்லாமல் இருப்பது

உலகின் முதல் ஸ்டிரைக்!

முதல் வேலை நிறுத்தம் (எகிப்து):

பிரமிட் கட்டும் தொழிலாளர்கள் செய்ததுதான் முதல் வேலை நிறுத்தம். கி.மு 1152-ம் வருடம் நடந்த போராட்டம் அது. 'பிரமிடுகள் கட்டிக்கொண்டு இருந்த தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் கோதுமை ஒழுங்காக வந்து சேரவில்லை' என்பது புகார். சொந்தக் காசில் உணவை வாங்க வேண்டிய கட்டாயம். சுத்தியலைத் தூக்கிப்போட்டுவிட்டு அந்த ஏரியாவை காலி செய்ய ஆரம்பித்தார்கள். அடுத்தடுத்து இப்படி நடந்த வேலை நிறுத்தப் போராட்டங்கள் கோதுமை மூட்டை மூட்டையாக வந்து இறங்கியதும் ஓய்ந்துபோனது. தொழிலாளர்களுக்குள்ளேயே தொழிலாளர் தலைவர்கள் முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டதும் இந்தப் போராட்டத்தில்தான்!

நைல் நதி உருவாகும் ஏரியை பற்றி உங்களுக்கு தெரியுமா?

எத்தியோப்பியாவின் வடக்குப் பகுதியில் உள்ள அழகிய பாகிர் தார் நகரில் உள்ளது அந்த பிரம்மாண்ட ஏரி. ‘தானா ஏரி’ என்று அழைக்கப்படும் அந்த ராட்சத ஏரியின் பரப்பளவு சுமார் 3,600 சதுர கிலோ மீட்டர்கள். இந்த ஏரிக்குள் 37 தீவுகள் உள்ளன. இவை அனைத்தையும் விட முக்கியமான விஷயம், இந்த பிரம்மாண்ட ஏரியில் இருந்துதான் உலகின் நீளமான நைல் நதி உற்பத்தியாகிறது.

தானா ஏரியில் உள்ள தீவுகளில் சரித்திர மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த தேவாலயங்களும், மடாலயங்களும் உள்ளன. பல்வேறு நூற்றாண்டுகளைச் சேர்ந்த இந்த தேவாலயங்களில் உலகின் பல அரிய ஓவியங்கள் உள்ளன. அந்த காலத்தில் புற உலகத் தொடர்பே இல்லாமல் தனித்திருந்ததால் எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற நாட்டின் அரிய கலைப் பொக்கிஷங்களையும், மதச் சின்னங்களையும் இங்கு பாதுகாத்து வைத்தனர். அக்காலத்தில் எத்தியோப்பியாவை ஆண்ட ஐந்து சக்கரவர்த்திகளின் உடல்களின் மிச்சங்களும் இங்குள்ள டாகா இஸ்டஃபேனஸ் என்ற தீவில் வைக்கப்பட்டுள்ளது.

பறவை நேசர்களுக்கும் தானா ஏரி ஒரு சொர்க்க பூமியாகத் திகழ்கிறது. காரணம், இந்த ஏரியின் கரைப் பகுதிகளில் பல்வேறு இனப் பறவைகள் காணப்படுகின்றன. உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் இங்கு ஏராளமான பறவைகள் வருகின்றன. எனவே ஏரி முழுவதும் ஆங்காங்கே காணப்படும் இந்த பல வண்ணப் பறவைகளைப் பார்த்துக் கொண்டே படகில் பயணம் செய்யும் அற்புதமான அனுபவத்திற்காக ஆண்டுதோறும் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

உலகின் நீளமான நைல் நதி இந்த தானா ஏரியில் இருந்துதான் தனது பயணத்தைத் தொடங்குகிறது. இங்கு தொடங்கி சூடானின் பாலைவனங்கள் வழியாகப் பயணித்து எகிப்து வரை செல்கிறது. தானா ஏரியில் இருந்து பிரிந்த இடத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் நைல் நதி வேகம் பிடிக்கத் தொடங்குகிறது. அப்பகுதியில் 40 மீட்டர் அகலத்தில் 45 அடி உயரத்தில் இருந்து பெரும் ஓசையுடன் விழும் நைல் நதி

நான்பூமி பேசுகிறேன்

என் மேல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களே ! 
என்னை பற்றி தெரியுமா ?
1. எனது பெயர் – பூமி
(மனிதர்கள் வைத்தது)
2. எனது பிறப்பு - 454 கோடி ஆண்டுகளுக்கு முன்பு
3. எனது உடன் பிறப்புகள் – 8 பேர் (இது வரையில் மனிதர்கள் கண்டுபிடித்து எனக்கு சொன்னது> (புதன்,வெள்ளி,செவ்வாய்,
வியாழன்,சனி,நெப்டியூன்,
ப்ளூட்டோ)
4. நான் சூரிய மண்டலத்தில் - மூன்றாவது கோள்
5. எனது துணைக்கோள் - சந்திரன்
6. எனது அண்டை வீட்டார் - வெள்ளியும், செவ்வாயும்
7. எனக்கு மிகவும் தொலைவிலுள்ள சொந்தம் – ப்ளூட்டோ
8. என் பாதுகாவலன் – வியாழன்
( என்னை நோக்கி வரும் சிறு கற்கள் முதல் பெரும் எறி நட்சத்திரங்கள் வரை தன்னுடைய ஈர்ப்பு விசையால் தன் மேல் விழச் செய்யும் )
9. என்னுடைய நண்பர்கள் – என்னில் வாழ்ந்து என்னையும் வாழவைக்கும் மரங்கள்
10. என்னுடைய எதிரிகள் – என் நண்பர்களான மரங்களை அழிக்கும் மனிதர்கள்
11. நான் சுழலும் முறை - வலமிருந்து இடம் ( மேற்கிலிருந்து கிழக்காக )
12. என்னை நானே சுற்றும் கால அளவு - 23 மூன்று மணி நேரம் 56 நிமிடங்கள் 4.100 நொடிகள்
13. நான் சூரியனைச் சுற்றும் கால அளவு - 365.256366 நாட்கள்
14. சூரியனிலிருந்து நான் இருக்கும் தூரம் - 14 கோடியே 96 லட்சம் கிலோ மீட்டர்
15. நான் சூரியனைச் சுற்றும் சுற்றுப்பாதை வேகம் - நொடிக்கு வேகம் 29.783 கிலொ மீட்டர்
16. எனது விட்டம் - நிலநடுக் கோட்டின் வழியாக பூமியின் விட்டம் 12,756 கிலோ மீட்டர் , ஆனால் வட தென் துருவம் வழியாக பூமியின் விட்டம் 12,713 கிலோ மீட்டர் ஆகும்.
17. என்னுடைய எடை - 5,980,000,000,000,000,000,000,000 கிலோ கிராம் ஆகும்.
18. என்னுடைய மொத்தப் பரப்பளவு - 510,072,000 கிலோ மீட்டர் அதில் நீர்ப்பரப்பளவு : 361,132,000 கிலோ மீட்டர் (70.8 %), நிலப்பரப்பளவு : 148,940,000 கிலோ மீட்டர் (29.2 %)
19. என்னுடைய மேற்பரப்பு வெப்பம் - அதிகபட்சம் : 331 கெல்வின் 57.7 °செல்சியஸ், குறைந்தபட்சம் : 184 கெல்வின் −89 °செல்கியஸ்.
20. என்னுடைய மையப் பகுதியின் வெப்பம் - 7000 கெல்வின்
21. என்னுடைய வெளிப்புற அழுத்தம் - ஒரு சதுர அடிக்கு 14.7 பவுன்ட்ஸ்
22. என்னுடைய மையப்புற அழுத்தம் - 360 ஜிகாபேஸ்கல்ஸ்
23. என்னுடைய சுற்றளவு - 40,075.02 கிலோ மீட்டர்.
24. நான் சுழலும் விதம் - 23.5 டிகிரி சாய்வாக
25. என்னைப் பிரிப்பது - அட்ச ரேகைகள், தீர்க்க ரேகைகள்
26. எனக்கு மேல் வாயு (வளிமண்டலம்) பரந்திருக்கும் தூரம் - 1000 கி.மீ
27. எனக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம் - 240,000 கி.மீ
28. எனக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போது - அமாவாசை
29. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நான் வருவது - பெளர்ணமி
30. சூரிய ஒளி என்னை வந்தடைய எடுத்துக் கொள்ளும் நேரம் - 480 விநாடிகள் (சுமார் 8 நிமிடங்கள்)
31. சூரியனுக்கும் எனக்கும் இடையில் வரும் சந்திரன் சூரியனை மறைப்பதால் ஏற்படும் நிழல் என் மீது விழும் போது ஏற்படுவது - “சூரிய கிரகணம்" அதாவது அமாவாசையில் வரும்.
32. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நான் வரும்போது என்னுடைய நிழல் சந்திரனை மறைக்கும் போது ஏற்படுவது - “சந்திரகிரகணம்" அதாவது பெளர்ணமியில் வரும்.
33. என் மேல் இருக்கும் நிலப்பரப்பின் கண்டங்கள் – மொத்தம் 7 > ஆசியா கண்டம், ஆப்பிரிக்க கண்டம், ஐரோப்பாக் கண்டம், தென் அமெரிக்க கண்டம், வட அமெரிக்க கண்டம், ஆஸ்திரேலியாக் கண்டம், அண்டார்டிகா கண்டம். இவற்றில்தான் அனைத்து நாடுகளும் உள்ளடங்கி உள்ளது.
34. என் மேல் இருக்கும் பெருங்கடல்கள் – மொத்தம் 5 > பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், அட்லான்டிக் பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல், அண்டார்டிக் பெருங்கடல். இவற்றில்தான் மற்ற அனைத்து சிறு கடல்களும் உள்ளது.
35. என்னுடைய தற்போதைய பிரச்சனை – சுற்றுச் சூழல் சீர்கேட்டால் நான் வெப்பமடைந்து கொண்டிருக்கிறேன். அதனால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டிருக்கின்றது.
36. என்னுடைய வேண்டுகோள் –
மனிதர்களே, மரங்களை வெட்டாதீர்கள்
அப்படி அடிப்படைத் தேவைக்காக வெட்டினால், அதைவிட அதிக மரங்களை நட்டு பராமரியுங்கள்.
கரியமில வாயுவை வெளியேற்றும் எரி பொருளையும், உபகரணங்களையும் முடிந்த அளவு குறையுங்கள்.
அதற்கு மாற்று எரிபொருளை உருவாக்குங்கள்.
நினைவிருக்கட்டும் நான் இருந்தால் தான் நீங்கள்
வாழ முடியும்